Header Ads

Header Ads

இளநீர் யாரெல்லாம் குடிக்க கூடாது தெரியுமா?




இயற்கையின் வரப்பிரசாதமான இளநீரில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் இருந்தாலும், தீமைகளும் உள்ளது உங்களுக்கு தெரியுமா?
மனித குலத்துக்கு இயற்கை தந்த பானம் இளநீர், வெப்பத்தை தணிக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

இதுமட்டுமா பொட்டாசியம், சோடியம் மற்றும் கலோரிகள் அதிகம் இருக்ககூடியது இளநீர்.

வீரர்களுக்கு ஏற்றதல்ல

இளநீர் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்ற பானமாக கருதப்படுகிறது, ஆனால் தடகள விளையாட்டு வீரர்களுக்கு இது ஏற்றதல்ல.

கார்போஹைட்ரேட் குறைந்த அளவிலும், பொட்டாசியம் அதிக அளவிலும் இருப்பதே இதற்கு காரணமாம்.

சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்

இளநீரில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் இருப்பதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்து விடும்.

எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் அருந்தாமல் இருப்பதே நலம், மேலும் சோடியம் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம்.



உடல் எடையை குறைக்க உதவாது

அனைவரும் நம்பிக் கொண்டிருக்கும் விடயம் இளநீர் உடல் எடையை குறைத்துவிடும் என்பதே.

ஆனால் அது உண்மையல்ல, மெக்சீனியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவாது, அதேபோன்று புற்றுநோய்க்கு எதிராகவும் போராடாது.

அலர்ஜியால் பாதிக்கபட்டவர்கள் குடிக்ககூடாது

இளநீர் மரத்திலிருந்து கிடைக்கும் பானம், இதனால் சிலசமயம் அலர்ஜி உள்ளவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

அதே போன்று இளநீர் உடல் வெப்பத்தை தணிக்கும், குளிர்ச்சியை தரும்.

இயற்கையாகவே குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள், குடிப்பதால் காய்ச்சல் போன்ற நோய்கள் வர வாய்ப்புகள் உண்டு.

வெட்டியவுடன் பருக வேண்டும்

இளநீரை வெட்டியவுடன் பருக வேண்டும், தாமதமாக பருகினால் இளநீர் உள்ள சத்துக்களின் வலிமை குறைந்துவிடும்.

No comments: