மலச்சிக்கல் ஏற்பட என்ன காரணம்?
மலச்சிக்கல் ஏற்படுதல் என்பது நம் உடம்புக்கும் மனதுக்கும் பிரச்சனையான ஒன்று. மலச்சிக்கல் ஏற்பட சாதாரண காரணங்களும் இருக்கின்றன. அசாதாரண காரணங்களும் இருக்கின்றன.
பொதுவாக தினமும் 2 முதல் 3 லிட்டருக்கு குறைவாக தண்ணீர் பருகுவது. பழம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடாதது. எண்ணை அதிகம் கலந்த வறுத்த, பொரித்த உணவுகளை உண்பது.
சிவப்பு நிற இறைச்சி வகைகளை அதிகமாக சாப்பிடுவது. உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது.. இப்படிப்பட்டவை எல்லாம் சாதாரண காரணங்கள். இவை பெரும்பாலும் இளம் வயதினருக்கு உருவாகும் ‘லைப் ஸ்டைல்‘ பிரச்சினைகள். அவைகளை தவிர்த்து மலக்குடலில் புற்றுநோயோ, கட்டிகளோ இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும்.
மலம் சரியாக வெளியேறாமல் இருந்தாலோ, மீண்டும் மீண்டும் கழிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டாலோ, அந்த நேரத்தில் வலி ஏற்பட்டாலோ அதற்குரிய சிறப்பு மருத்துவர்களை சந்திக்க வேண்டும். மலத்தோடு ரத்தம் கலந்து வந்தால், குடலிலே ரத்தக்கசிவு இருப்பதாக அர்த்தம்.
இதைத்தான் நாம் உள்மூலம், வெளிமூலம் என்று இரண்டு வித பாதிப்புகளாக குறிப்பிடுகிறோம். இந்த மூலநோய் நான்குவிதமான நிலைகளைக்கொண்டது. முதல் இருகட்ட பாதிப்பு வெளியே தென்படாமல் உள்ளேயே இருக்கும். 3, 4-ம் நிலை பாதிப்பு ஆசன வாய் வழியாக வெளியே தெரியும்.
No comments: